Home CRIME NEWS சிறுவனின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தடவிய வார்டன் – அனாதை இல்லத்தில் சம்பவம்

சிறுவனின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தடவிய வார்டன் – அனாதை இல்லத்தில் சம்பவம்

38
திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுவன், அதன் கண்காணிப்பாளரால் பிறப்புறுப்பில் மிளகாய்த்தூள் தடவியமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நித்திரையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்காணிப்பாளர் குழந்தையை குளியலறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றி பிறப்பு றுப்பில் மிளகாய் பொடியை பூசியதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சிறுவனின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி

அனாதை இல்லத்தில் சுமார் 25 குழந்தைகள் இருப்பதாகவும், வார்டன் அவர்களை துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்துவதாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.