Home Cinema பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

12
பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

விக்ரம் ஆதித்யா, மிகவும் நன்கு அறியப்பட்ட கைரேகை நிபுணர், கடினமாக முயற்சி செய்த போதிலும், டாக்டர் பிரேரனாவை காதலிக்கிறார்.

அவர் அவளுக்கு ஒரு நீண்ட மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை கணித்தாலும், விதி வேறு கணித்தது வைத்திருப்பது போல் தெரிகிறது?

இந்தியளவில் சக்திவாய்ந்த கைரேகை சோதிடராக திகழ்ந்து வருகிறார் சத்யராஜ், அவரின் சிஷ்யனாகவும் கைரேகை மூலமாக எதிர்காலத்தையே கணிக்கும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் பிர பாஸ் அறிமுகமாகிறார். சில காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள பிரபாஸ் உலகம் சுற்றும் வாலிபனாக இருந்து வருகிறார்.

காதல், கல்யாணத்தில் விருப்பமில்லாமல் பல பெண்களுடன் சுற்றி வருகிறார் பிரபாஸ், ஆனால் ஒரு நாள் ரயிலில் பூஜா ஹெக்டேவை சந்திக்கும் பிரபாஸ் காதல் வையப்படுகிறார். இத்தாலியில் மருத்துவராக இருந்து வரும் பூஜா ஹெக்டேவை பிரபாஸ் பின்தொடர இருவரும் காதலில் விழுகின்றனர்.

Radheshyam

மறுபுறம் தனது எதிர்காலத்தை ஏற்கனவே கணித்துள்ள பிரபாஸ் பூஜா ஹெக்டேவிடம் தான் இருவரும் ஒன்றாக சேரமுடியாது என்ற உண்மையை அவரிடம் கூறுகிறார். பிரபாஸுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பூஜா ஹெக்டே சில திடுக்கிடும் முடிவுகளை எடுக்கிறார்.

இதனால் நிலை தடுமாறும் பிரபாஸ் தனது துள்ளிய கணிப்பை தானே முறியடித்து எப்படி பூஜா ஹெக்டேவுடன் ஒன்றாக சேர்கிறார் என்பதே ராதே ஷ்யாம் படத்தின் மீதி கதை.

பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தின் திரைவிமர்சனம்

பிரபலமான கைரேகை ஜோதிடராக வரும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பிர பாஸ்.

படம் முழுக்க நடிகை பூஜாவுடன் காதல் காட்சிகளை அள்ளி தெளித்துள்ளார். ஆனால் படத்தில் சில ஆக்ஷன் மற்றும் முக்கிய காட்சிகளில் அவரின் முகம் CGI செய்யப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது.

மருத்துவராகவும் உயிர்கொல்லி நோய்யாலும் பாதிக்கப்படுள்ள Prerana என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே காதல் காட்சிகள் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார்.

மேலும் மற்ற கதாபாத்திரங்களில் வரும் சத்யராஜ், சச்சின், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பு ஓகே. பின் வில்லன் போல ஓப்பனிங் கொடுக்கப்பட்டு படத்தில் அவர் என் வந்தார் என கேட்கும் படி இந்த படத்திலும் நடித்துள்ளார் ஜெகபதி பாபு.

ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை, S.S.தமனின் பின்னணி ஓகே. மனோஜ் பரஹம்சாவின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் தரமாக இருந்தது.

மேலும் 1976-ல் நடக்கும் இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் செட் மற்றும் பிசுறுத்தட்டும் CGI தான். இதனால் இப்படத்தின் உண்மைத்தன்மையை உணரமுடியவில்லை.

பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!  விக்ரம் ஆதித்யா, மிகவும் நன்கு அறியப்பட்ட கைரேகை நிபுணர், கடினமாக முயற்சி செய்த போதிலும், டாக்டர் பிரேரனாவை காதலிக்கிறார்.

இயக்குனர் ராதா கிருஷ்ணா குமாரின் திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவாகவே உள்ளது. இதனால் படத்தின் மீதான ஈடுபாடு சுத்தமாக இல்லை.

படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளை வைத்து எழுத்துள்ளனர், ஆனால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்ட முயற்சி செய்ததோடு கிளைமாக்ஸ் சுனாமி காட்சிகளில் அசத்தியுள்ளனர்.

பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!  விக்ரம் ஆதித்யா, மிகவும் நன்கு அறியப்பட்ட கைரேகை நிபுணர், கடினமாக முயற்சி செய்த போதிலும், டாக்டர் பிரேரனாவை காதலிக்கிறார்.

சில பாடல்களின் படத்தொகுப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட நல்ல இசை வீடியோக்களை உங்களுக்கு நினைவூட்டுகிறது. VFX ஒரு கைதட்டலுக்கு தகுதியானது,

மேலும் படத்தின் காட்சி தரத்தை அதிகரிக்கிறது. ஆனால் இவை அனைத்தும் இந்த காதல் கதையை காப்பாற்றவில்லை, அதன் விதி உண்மையில் வேறு ஏதாவது இருந்திருக்கலாம்.