Home Ampara news பிரதேச சபை தவிசாளர் பெண்ணுடன் சல்லாபம்!! – கண்டுபிடித்த மனைவி கவனிப்பு

பிரதேச சபை தவிசாளர் பெண்ணுடன் சல்லாபம்!! – கண்டுபிடித்த மனைவி கவனிப்பு

18
பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் மனைவிக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரதேச சபைத் தவிசாளரின் மனைவி காயமடைந்தார்.

பிரதேச சபையின் தவிசாளர் இன்னொரு பெண்ணுடன் வீடொன்றில் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்ததை மனைவி கண்டுபிடித்ததை அடுத்தே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை, லகுகல பிரதேச சபைத் தவிசாளரே கையும், பெண்ணுமாக மனைவியிடம் சிக்கியுள்ளார்.

தவிசாளரின் மனைவிக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், மனைவி திடீரென வீடொன்றுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது கணவரான பிரதேச சபைத் தவி சாளர் பெண் ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்துள்ளார்.

பிரதேச சபை ஒன்றின் தவிசாளர்

தவிசாளரின் மனைவிக்கும், வீட்டிலிருந்த பெண்ணுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருக்கின்றது. அதில் தவிசாளரின் மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபைத் தவிசாளருடன் சல்லாபித்துக் கொண்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.