Home Local news பதுளையைச் சேர்ந்த யுவதி ராகலையில் மாயம்

பதுளையைச் சேர்ந்த யுவதி ராகலையில் மாயம்

21

பதுளை பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் ராகலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 07ம் திகதி ராகலை நகரில் உள்ள ATM இயந்திரத்தில் பணம் பெற்றுக்கொள்ள சகோதரியின் வீட்டில் இருந்து சென்ற நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளார்.

20 வயதான குறித்த யுவதியின் பெயர் கணேசமூர்த்தி காயத்திரி என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 7ம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்ட போதும் இதுவரை தமது சகோதரி தொடர்பில் எதுவித தகவலும் இல்லை என குறித்த யுவதியின் சகோதரி தெரிவித்தார்.

பதுளையைச் சேர்ந்த யுவதி ராகலையில் மாயம்

தனது சகோதரியின் தகவல்கள் ஏதும் கிடைக்குமாயின் , 0776320266 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.