Home நாட்டு நடப்புக்கள் பதவி விலகல் செய்தி ஒரு நாடகமே!??

பதவி விலகல் செய்தி ஒரு நாடகமே!??

15

தகவலுக்காக…

பிரதமர் மஹிந்த பதவி விலக கூடாதென்றே, அமைச்சர்மார் அனைவரும் கையொப்பமிட்டு கடிதமொன்றை பிரதமரிடம் கொடுத்துள்ளனர் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் பிரதமர் விலகினால் மட்டுமே அமைச்சரவை முழுமையாக கலையும்.. அல்லது ஜனாதிபதி இந்த கடிதத்தை ஏற்று புதிய அமைச்சரவையை நியமிக்கலாம்.. சிலசமயம் இந்த கடிதத்தை ஏற்காவிட்டால் இதே அமைச்சரவை தொடரலாம்…

அமைச்சர்கள் எவரும் விலகத் தயாராக இல்லை .. பிரதமர் அந்த பதவியில் நீடிக்கவேண்டுமென்றே அவர்கள் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.. ( அதாவது அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல் கடிதம் பிரதமரிடம் வழங்கியதாக சொல்லப்பட்ட தகவல். உண்மையில் பதவி விலகுவதானால் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடமே சமர்ப்பித்தல் வேண்டும். பிரதமரிடம் அல்ல. ஆகவே அது செல்லுபடியற்றது ) ஜனாதிபதி , பிரதமர் , நிதியமைச்சு பதவிகளில் நேற்றிரவுவரை எந்த மாற்றமும் இல்லை…

ஜனாதிபதி இன்று அமைச்சரவையை கூட்டுகிறார்.. இதே அமைச்சரவை தொடர வேண்டும் என்பதுதான் ஜனாதிபதியின் எண்ணம் என்பது தெரிகிறது…

பதவி விலக பிரதமர் மஹிந்த எடுத்த முடிவு நேற்று எப்படி இறுதி நேரத்தில் மாற்றப்பட்டதோ , அதேபோல் இன்றும் தீர்மானங்கள் மாறலாம்…

இடைக்கால அரசில் அங்கம் வகிக்க எதிர்க்கட்சியில் எவரும் தயாராக இல்லை..

‘ நாங்கள் பதவி விலகினால் அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருப்பதாக நாமே ஏற்றுக்கொண்டதாக அமைந்துவிடும்..

எனவே இதே அமைச்சரவையை தொடர்வோம்..’ என்று நேற்று இரவு நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பிரதமரிடம் கூறியுள்ளனர்…

இன்று ஜனாதிபதி எடுக்கும் தீர்மானமே இறுதி முடிவு…

நேற்று முன்னதாக தீர்மானிக்கப்பட்டபடி பிரதமர் பதவி விலகியிருந்தால் , மக்கள் எதிர்ப்பு சற்று தணிந்திருக்கும்… அவரும் கனவானாக சென்றிருப்பார்.. ஆனால் இப்போது நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது…

இடைக்கால அரசுக்கான ஏற்பாடு நடந்தாலும் அதிலும் இதே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால் , அது மக்களின் வெறுப்பையே சம்பாதிக்கும்…

மஹிந்த ராஜபக்ச கட்டியெழுப்பிய அந்த அரசியல் சாம்ராஜ்யம் சரிந்துகொண்டிருக்கிறது.. அதற்குள் இந்தியா, சீனா போன்ற நாடுகளும் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன… ஆனால் நாட்டில் மக்கள் எதிர்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது… மக்கள் சக்திக்கு முன்னர் இந்த நாடுகளின் நகர்வுகள் நிற்கவே முடியாது..

தொடர்ந்து பேசுவோம்…!