இன்று (30) பண்டாரவளை விளையாட்டு மைதான திறப்பு விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஷ கலந்து கொள்ளவிருந்த போதிலும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவிருந்த புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை பண்டார-வளை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க திறந்து வைத்தார்.
பண்டாரவளை நகருக்கு அருகில் பண்டார-வளை – பதுளை வீதியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வந்த பெருந்தொகையான மக்கள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுளை – பண்டார-வளை வீதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சில மணித்தியாலங்கள் வீதி மூடப்பட்டிருந்த நிலையில், குறித்த வீதியை புறக்கணித்து மாற்று போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதித்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி வீதியை திறப்பதற்கு பண்டார-வளை பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.