இன்று பிற்பகல் பசறை – நமுனுகுல பத்தாம் மைல்கல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேரூந்துகள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளையிலிருந்து பச றை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் ஒன்றும், பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பாடசாலை சேவை பேருந்தும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இதில் தனியார் பயணிகள் பேருந்து சாரதி உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.