நீரிழிவு நோயினால் காலை இழந்து தவித்து வந்த றம்புக்கனை, சியம்பலங்கமுவ பகுதியைச் சேர்ந்த திருமதி.அனுஷா அத்தநாயக்கவுக்கு, அலரிமாளிகையில் வைத்து நேற்று (17) பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அவர்களினால் செயற்கை கால் வழங்கி வைக்கப்பட்டது.
சுமார் பத்து வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஐம்பத்து ஐந்து வயதுடைய குறித்த பெண்மணி பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவுக்கு தனது துன்பங்களை நெரிவித்ததன் விளைவாக செயற்கைக் கால் வழங்கப்பட்டது.
இதுவரை தானடைந்த துன்பத்திற்கு விமோசனம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள திருமதி.அனுஷா அத்தநாயக்க கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.