Home Local news நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்

நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்துடன் காலி முகத்திடலில் தொடரும் போராட்டம்

15

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசுக்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக் காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன்,அதிலும் புதுவருட தினமான இன்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளான மக்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் ‘கோட்டா கோ ஹோம்’‘GoHomeGotta’ என கோஷங்களை எழுப்பிவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

22 6258Aa80356Ff 22 6258Aa80Ef873 22 6258Aa811Bb4C 22 6258Aa80A39Eb 22 6258Aa80C8B0D