Home jaffna news நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி; அச்சமின்றி வாருங்கள்

நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி; அச்சமின்றி வாருங்கள்

14
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில், நினை-வேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமின்றி அனைவரையும் நினை-வேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினை-வேந்தல் பொதுக் கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினை-வேந்தல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நாளை (18) உணர்வெளிச்சியுடன் இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினை-வேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார் மற்றும் பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி, நினை-வேந்தல் ஏற்பாட்டு வேலைகளையும் சிரமதான பணிகளையும் இன்றும் (17) நேற்றும் (16) முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினை-வேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நினை-வேந்தல் செய்ய எந்தத் தடையும் இல்லை என பிரதமர் தெரிவித்தாலும் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் அமைக்கப்பட்டமைக்கு உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, நினை-வேந்தல் வளாகத்தை சூழ பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நினை-வேந்தல் வளாகத்துக்குள் வருபவர்களை பொலிஸார் பதிவு செய்து அச்சுறுத்தல் விடுதும் வருவதாக உறவுகள் குற்றம் சுமத்துகின்றனர்.

நினைவேந்தல் Fb Img 1652797399659 Fb Img 1652797397330 Fb Img 1652797402196 நினைவேந்தல்