Home world news நாணயங்களை அடுக்குவதில் யுவதி கின்னஸ் சாதனை!

நாணயங்களை அடுக்குவதில் யுவதி கின்னஸ் சாதனை!

14

பங்களாதேஷ் யுவதியொருவர், நாணயக் குற்றிகளை வேகமாக அடுக்குவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பரிசால் நகரில் வசிக்கும் நுஸ்ரத் ஜெஹான் நிபா எனும் இந்த யுவதி ஒரு நிமிடத்தில் 71 நாணயக் குற்றிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கியுள்ளார்.

Nusrat Jahan Nipa 00000

இது புதிய உலக சாதனையாக கின்னஸ் சாதனை பதிவாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், இத்தாலியைச் சேர்ந்த சில்வியோ சபா, 2015 ஆம் ஆண்டில் 69 நாணயங்களை அடுக்கியமையே கின்னஸ் சாதனையாக இருந்தது. ஒரு டாக்கா நாணயங்களை இவ்வறூ நுஸ்ரத் ஜெஹான் அடுக்கினார்.

Nusrat Jahan Nipa 3 1

‘லொக்டவுண் காலத்தில் வீட்டில் சும்மா இருக்காமல் ஏதேனும் ஆக்கபூர்வமாக நேரத்தை செலவிடுவதற்கு நான் விரும்பினேன். கின்னஸ் சாதனைப் பதிவுகளை ஆராய்ந்தபோது இந்த விளையாட்டு குறித்து அறிந்துகொண்டேன்’ என இல்லத்தரசியான நுஸ்ரத் ஜெஹான் நிபா தெரிவித்துள்ளார்.