Home Local news நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு எதிராக நுவரெலியா பொது வைத்தியசாலையில் போராட்டம்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு எதிராக நுவரெலியா பொது வைத்தியசாலையில் போராட்டம்

15
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு எதிராக நுவரெலியா பொது வைத்தியசாலையில் போராட்டம்

நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, டீசல், எரிவாயு, மின்வெட்டு, சுகாதார சேவைகளுக்குத் தேவையான மருந்துகள் உட்பட பல வசதிகள் இழப்புக்கு எதிராக நுவரெலியா பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்கள் இன்று (05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் தற்போது நிலவும்

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வைத்தியசாலையை விட்டு ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர்கள், நுவரெலியா நகர மையத்திற்கு பேரணியாகச் சென்று, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலை வளாகத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

தற்போதைய அரசாங்க அரசியல்வாதிகள் நாட்டின் பணத்தை திருடி வெளிநாடுகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட நுவரெலியா பொது வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் கனிஷ்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் தற்போது நிலவும்

நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தாய்நாட்டிற்கு மீட்டு வைப்புச் செய்ய வேண்டும் எனவும் அந்த அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுவரெலியா பொது வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் நாடு அதல பாதாளத்திற்கு செல்வதாகவும் நோயாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கையை வெட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் தற்போது நிலவும்

இந்த ஆர்ப்பாட்டத்தில் நுவரெலியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் சார்பாக பல வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவும், நாட்டில் தற்போது நிலவும்