Home Local news நாட்டின் தற்போதைய ஊரடங்கு மேலும் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா?

நாட்டின் தற்போதைய ஊரடங்கு மேலும் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா?

14

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்து வந்த நிலையில், ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இன்று இரவு நடத்த ஆர்ப்பாட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை திக்குமுக்காட செய்துள்ளதாக அந்த கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதியின் நுகேகொடை மிரிஹான இல்லத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இலங்கையில் வராலாற்றில் ஆட்சியாளர் ஒருவரின் வீட்டுக்கு அருகில் நடைபெறாத ஆர்ப்பாட்டமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

நாட்டின் தற்போதைய ஊரடங்கு மேலும் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா?

இந்த ஆர்ப்பாட்டத்துடன் நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கம் மற்றும் அதன் தற்போதைய கொள்கைகளுக்கு எதிராக உடனடியான ஆர்ப்பாட்டங்கள் எழுந்து வருவதை காண முடிகிறது.

இதன் காரணமாக தற்போது அவ்வாறான ஆர்ப்பாட்ட, எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இது இன்று மாலை முதல் இதுவரையான நிலைமை. இந்த ஊரடங்குச் சட்டம் மேலும் பல பகுதிகளுக்கு நடைமுறைப்படுத்தப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் நம்பந்தகுந்த அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய ஊரடங்கு மேலும் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா?

முதலில் போராட்டம் நடைபெற்ற நுகேகொடை பொலிஸ் பிரிவில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் இதனையடுத்து கொழும்பு வடக்கு தெற்கு பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதேவேளை கொழும்பு – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள களனியிலும் காலி வீதியில் அமைந்துள்ள பிரதான நகரமான கல்கிஸ்சையிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றங்கள் வறிய மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தற்போதைய ஊரடங்கு மேலும் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா?

நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமைகள் நாளை தினம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் சாதாரண மக்கள் மத்தியிலும் நடுத்தர மக்கள் மத்தியிலும் இருந்து வருவதுடன் அது ஆங்காங்கே போராட்டங்களாக வெடித்து சிதறி வருகிறது என்பதை கண்கூடாக காண கூடியதாக இருக்கின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மக்கள் கிளர்ச்சியாக உருவெடுக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை காணக் கூடியதாக இருக்கின்றது.

நாட்டின் தற்போதைய ஊரடங்கு மேலும் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா?

இரண்டு தசாப்தங்ளுக்கு முன்னர் ஜே.வி.பியின் புரட்சி காலம் மற்றும் விடுதலைப் புலிகளின் போராட்டம் காலம் ஆகியவற்றின் போது நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டம் , ஊரடங்குச் சட்டம் என்பன தற்போதைய தலைமுறைக்கு புதியவையாக இருந்தாலும் பொருளாதார நெருக்கடியானது அவர்களுக்கு அந்த அனுபவத்தை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதே உண்மை.

எது எப்படி இருந்த போதிலும் நாளைய தினம் நாட்டின் அடுத்து ஏற்படக் கூடிய நிலைமைகள் எதிர்வரு்ம் நாட்களில் நடக்கும் விடயங்களை கணிக்கக் கூடியதாக இருக்கும்.