90ஸ் கிஸ்ட்களின் கனவுக்கனியாக இருந்த நடிகை தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறாராம். ஆரம்பத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வந்த அம்மணி சில சர்ச்சைகளிலும் சிக்கியும் திருமணம் செய்யாமலும் கஷ்டப்பட்டு வந்தார்.
இதனால் தன்னுடைய மார்க்கெட்டையே இழந்தார். இதையெல்லாம் போக்க நம்பர் பெயரை கொண்ட படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். இதன்பின் வாய்ப்புகள் கிடைத்தும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் காவிய படத்தில் பிரபல இயக்குனர் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒன்று தான் தனக்கு உயிராக இருந்து காப்பாற்றப்போகிறது என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார் அம்மணி.
அப்படியிருக்கையில் நோ பெயர் கொண்ட இயக்குனர் இயக்கிய படத்தில் நடித்தும் அது வெளியாகமல் இழுத்தடித்து வருகிறது. எல்லா பணிகளும் முடிந்தும் இயக்குனர் அப்படத்தினை பற்றி எந்த வார்த்தையும் கூறாமல் மெளனம் காத்து வருகிறாராம்.
இதற்கு காரணம் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் மனக்கசப்பு தான் எல்லாத்திற்கு காரணமாக இருக்கிறது. இவர்கள் ரெண்டு பேரின் பிரச்சனையால் புலம்பி வருகிறாராம் அம்மணி. கடைசியில் சமையல் நிகழ்ச்சி நடிகர் படத்தில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் மூன்றெழுத்து நடிகை.