Home today Astrology துலாம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

துலாம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

13
துலாம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருஷம் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் நற்பலன்களைக் காண்பீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்கள், உடன் பிறந்தோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

துலாம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

செய்தொழிலில் லாபம் கூடத் தொடங்கும். உங்கள் நன்னடத்தையால் அனைவரையும் கவருவீர்கள். உங்கள் செயல்பாடுகளின் மூலம் அனைவரின் ஆதரவுகளையும், குறிப்பாக புதியவர்களின் ஆதரவைப் பெற்று செயற்கறிய செயல்களைச் செய்வீர்கள்.

நண்பர்களின் வேலைகளிலும் பங்கெடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் உங்கள் ரகசியங்களை முழுமையாக வெளிப்படுத்தாமல் காரியமாற்றும் கால கட்டமிது என்றால் மிகையாகாது.

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் குடும்பத்தில் சிறு குழப்பம் உண்டாகி மறையும். உடல்நலத்திலும் சிறிது பாதிப்புண்டாகும். அதனால் உணவு விஷயங்களில் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்கவும். உடற்சோர்வையும், சோம்பேறித்தனத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு கடுமையாக உழைக்கத் தொடங்குவீர்கள்.

வருமானம் சீராக இருந்தாலும், பேராசைக்கு இடம் தராமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளை இனம்கண்டு ஒதுக்கிவிடுவீர்கள். அதோடு எவருக்கும் முன்யோசனை இல்லாமல் வாக்கு கொடுக்க வேண்டாம். மற்றபடி புதிய கடன்கள் என்று எதுவும் ஏற்படாது.

தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். தடங்கல்கள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். அனுபவம் இல்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம். உங்களின் முயற்சிகளைச் செம்மைபடுத்தி சரியாகத் திட்டம்தீட்டி வெற்றியடைவீர்கள்.

மற்றபடி குடும்ப வளம் மேம்பாடடையும். செலவுகள் குறைந்து சேமிப்பு கூடத் தொடங்கும். மற்றபடி எவ்வளவுதான் கடினமான சூழ்நிலையில் இருந்தாலும் உங்களின் தனித்தன்மையை இழக்காமல் காரியமாற்றும் கால கட்டமிது.

உத்யோகஸ்தர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். சக ஊழியர்களின் அனுசரணையும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் கொள்க.

குறுக்கு வழியைத் தேடாமல் நேர்மையான வியாபாரம் செய்தீர்களேயானால், முன்னேற்றம் காணலாம். விவசாயிகள் இந்த வருடத்தில் பல புதுமைகளைக் கையாள்வீர்கள். மகசூல் பெருகும். தானியங்களை சந்தைகளில் விற்று அதிக லாபமீட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள் நலிந்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற, தொண்டர்களுடன் கைகோர்த்து மேலிடத்திடம் முறை யிட்டு வெற்றி கிடைக்க வழிவகுப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றமான சூழலும், திருப்புமுனையும் உண்டாகும். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொண்டால் அனைத்தையும் வசமாக்குவீர்கள்.

பெண்மணிகள் கவனத்துடன் சுப காரியங்களை நடத்த வேண்டிவரும். இல்லையெனில் குழப்பத்துடன் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் கொள்க.

மாணவமணிகள் மிகுந்த கவனமுடன் பாடங்களைப் படிக்கவும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளை விடாமல் செய்து வரவும். உள்ளரங்கு விளையாட்டைத் தொடருங்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

துலாம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022, துலாம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022