Home CRIME NEWS துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபர் தலைமறைவு, சிறுமி நஞ்சருந்தி தற்கொலை முயற்சி

துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபர் தலைமறைவு, சிறுமி நஞ்சருந்தி தற்கொலை முயற்சி

21

துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், துஷ்பிரயோகத்திற்குள்ளான 15 வயது சிறுமி நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குடாஓயா – தெபராஹாரா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,

துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி, அவரின் 5 வயது சகோதரருடன் பயிர்ச்செய்கை நிலத்திலுள்ள கூடாரமொன்றில் நித்திரைகொண்டிருந்தபோது,

அருகிலிருந்த கூடாரத்திலிருந்த 27 வயதுடைய நபரொருவர் துப்பாக்கியை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரின் கூடாரத்துக்கு அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த நான்காம் திகதி நஞ்சருந்தியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பொலிஸாரின் விசாரணைகளின்போது இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு சிறுமி அறிவித்துள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய சந்தேநபர் அந்த பிரதேசத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.சீ. பிரசாத் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.