Home Local news தீ வைக்க சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி, 8 பேர் வைத்தியசாலையில்

தீ வைக்க சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி, 8 பேர் வைத்தியசாலையில்

15

வீரகெடிய பிரதேசத்தில் நேற்றையதினம் (09-05-2022) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மேலும் 8 பேர் காயமடைந்து வீரகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சிலர் வீரகெடிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது, வீரகெடிய பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு தீ வைப்பதற்காக சிலர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.