Home Accident News திருகோணமலை விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

திருகோணமலை விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

23

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்றிரவு (18) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கலன்பிந்துனுவெவ-மெகொடவெவ,யகல்ல பகுதியைச் சேர்ந்த சஜித் லக்ஸான் ராஜபக்ச (19வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸார் சிசிடிவி கெமராக்களை சோதனையிட்டு வருவதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு திருகோணமலை விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு