Home Local news திருகோணமலையில் பறக்க விடப்பட்ட கருப்புக் கொடிகள்

திருகோணமலையில் பறக்க விடப்பட்ட கருப்புக் கொடிகள்

16

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் நேற்று இரவு 6 மணி முதல் திங்கள் அதிகாலை 6 மணி வரை அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது

அதனை அடுத்து இன்றையதினம் (03) திருகோணமலை நகரை அண்டிய பிரதான வீதிகளில் வீதி எங்கும் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது

நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இன்றையதினம் கருப்புக் கொடிகளை பறக்க விடுமாறு செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் திருகோணமலை நகரின் வீதிகள் எங்கும் இவ்வாறு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் பறக்க விடப்பட்ட கருப்புக் கொடிகள் திருகோணமலையில் பறக்க விடப்பட்ட கருப்புக் கொடிகள் திருகோணமலையில் பறக்க விடப்பட்ட கருப்புக் கொடிகள்