Home Cinema தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆத்தாடியோ! அதிரவைக்கும் சொத்து விபரம்!

தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆத்தாடியோ! அதிரவைக்கும் சொத்து விபரம்!

57

தமிழ் சினிமாவில் என்றும் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் இல்லாத நிலையில், பீஸ்ட் படம் விஜய் திரைவாழ்க்கையில் தோல்வி படமாக அமைந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் முக்கியமாகும்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ, 410 கோடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரைவட்டாரங்களால் கூறப்படுவது இவை தான்.