தரலோக்கலாக உருவான AK61 ஓப்பனிங் பாடல் !!வைரலாகும் தகவல் இதோ !!
அஜீத் குமாரின் வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு, தமிழகம் மற்றும் சர்வதேச நாடுகளில் அணைத்து திரையரங்குகளில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எதற்கும் துணிந்தவர் படம் வந்தபோதிலும் , வலிமை தமிழ்நாட்டில் பல திரைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாவது வாரத்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கியதாகத் தெரிகிறது.
சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய புதிய வெளியீடுகள் இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமையை திரையிட விரும்புகிறார்கள்.
அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். அஜித்தின் 61 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ‘AK61’ என்று அழைக்கிறார்கள்.
தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதோடு, படத்தின் கதை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜிப்ரான் ஒரு தரலோக்கலாக ஓப்பனிங் பாடல் ரெடி பண்ணியுள்ளாராம் இந்த செய்தி தற்போது வைரலாகிவருகிறது.