Home Cinema தன் பங்குக்கு பீஸ்ட் படத்தை பங்கமாய் கலாய்த்த யுவன்.! நீங்களே பாருங்க வைரல் வீடியோ இதோ...

தன் பங்குக்கு பீஸ்ட் படத்தை பங்கமாய் கலாய்த்த யுவன்.! நீங்களே பாருங்க வைரல் வீடியோ இதோ !!

16

தமிழ் சினிமாவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் சிம்புவின் ‘மாநாடு’ படத்திற்கு ஹிட் இசையை வழங்கினார். விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, தனுஷின் ‘நானே வருவேன்’, சந்தானத்தின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, விஷாலின் ‘லத்தி’ மற்றும் நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடிக்கும் ராமின் பெயரிடப்படாத திட்டம் ஆகியவை அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரவிருக்கும் படங்கள் ஆகும்.

அனிருத் பாடல் அமைத்தால் , உடனே இணையவாசிகள், அந்த பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என ஆராய்ந்து விடுகின்றனர். அதன் பின்னர், அப்படி அந்த பாடல் அனிருத் இசையமைத்து இருந்த பாடல் போல ஒன்றாக இருந்தால் உடனே இணையத்தில் போட்டு ட்ரெண்ட் செய்து விடுகின்றனர்.

அப்படி தான் பீஸ்ட் மூட் ஆன் எனும் தீம் மியூசிக் உடன் வரும் பாடல் வேறு ஒரு ஆங்கில பாடல் போல இருகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அந்த ஆங்கில பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது துபாய் விடியோவுடன் இணைத்து போட்டு உள்ளார்.

பீஸ்ட் மூட் பாடலுக்கு காப்பி என இணையவாசிகள் கூறி வரும் நிலையில், யுவனின் இந்த வீடியோ அதே அளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா, துபாயில் நடந்த எக்ஸ்போவில் கச்சேரி நடித்தினார். மேலும் பல சினிமா பிரபலங்கள் துபாயில் நடந்த எக்ஸ்போவில் கலந்துகொண்டனர்.