Home today Astrology தனுசு – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

தனுசு – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

15
தனுசு – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்)

நீதி, நேர்மை, தனுசு இதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தரும் வருடமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

13/04/2022 வரை எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் விடாமுயற்சியால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய பயம், எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை யுடனும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நன்மை விளையும்.

தனுசு - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்)

உடன் பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது. இருப்பினும் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், உங்கள் தேவைக்கு ஏற்ப பொருளாதார நிலை இருக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தாமதமாகும். மாணவர்கள் சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது.

13/4/2022 க்கு பிறகு வாழ்வில் சின்ன சின்ன தடைகள் இருந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தாய் உடல்நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் உண்டாகும்.

வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. மன அமைதி குறையும் என்பதால் யோகா தியானம் செய்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.

எதிர்பாராத தன லாபம் உண்டு. நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். முயற்சிக்குத் தக்க பலன் கிடைக்கும்.

தனுசு - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்)

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இடமாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் கவனம் தேவை. இருப்பினும் லாபம் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு தலைமை மற்றும் சகாக்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியமின்மை கல்வியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: மயிலாப்பூர் கற்பகாம்பாளை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது சுபிட்சம் தரும்.

தனுசு – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், தனுசு – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்