இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்ட பந்தயத்தின் தற்போதைய தேசிய சம்பியனான 25 வயதான கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.
நேற்று (24) காலை 11 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குளியாப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கை கொண்ட தடகள வீராங்கனை எனவும், துரதிஷ்டவசமாக தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கௌசல்யா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடை ஓட்டப் போட்டியில் தற்போதைய தேசிய சம்பியனான கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், இந்த முடிவு அவரால் எடுக்கப்பட்டது என்றும், மரணம் குறித்து விசாரிக்கவோ அல்லது காரணமானவர்களைக் கண்டுபிடிக்கவோ தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இது என் விருப்பம். இதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல. என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளுக்கு வேறு யாரையும் விசாரிக்கவோ யாரையும் பொறுப்பேற்க செய்யவோ தேவையில்லை, நானே பொறுப்பேற்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.