Home Cinema ஜெயம் ரவியுடன் இணையும் விஜய் திரைப்பட கதாநாயகி கசிந்த உண்மை இதோ !!

ஜெயம் ரவியுடன் இணையும் விஜய் திரைப்பட கதாநாயகி கசிந்த உண்மை இதோ !!

11

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் நாவல்களை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக படத்தை இயக்கியுள்ளார்.

இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி அகிலன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ஜன கண மன, ராஜேஷ் இயக்கும் புதிய படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராஜேஷ்-ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

அந்த வகையில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.