Home Local news சொகுசு காரில் ஹெரோயினுடன் வந்த யாழ், வவுனியாவை சேர்ந்த 2 இளம் ஜோடி கைது

சொகுசு காரில் ஹெரோயினுடன் வந்த யாழ், வவுனியாவை சேர்ந்த 2 இளம் ஜோடி கைது

21

ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த இரு இளம் குடும்பங்களை கைது செய்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி சென்ற சொகுசு காரினை ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது குறித்த காரில் 63.84 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை கொண்டு சென்றமை தொடர்பில் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட 4 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன்- மனைவியென இரண்டு இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார்கள்.

கைதானவர்கள் மதவுவைத்தகுளம் மற்றும் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் 4 மற்றும் 8 மாதக் குழந்தைகளும் காரில் பயணித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் குறித்த 4 பேரையும் நீதிமன்றில் முற்படுத்த ஈரப்பெரியகுளம் பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.