சென்னையின் மேயராகப் பதவியேற்ற முதல் தலித் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார் பிரியா ராஜன். 28 வயதில் அவர் அவ்வாறு செய்த இளையவர் மற்றும் மற்ற இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாகப் புகழப்படுகிறார்.
இதனிடையே தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள முக்கிய கோவிலான காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் தரிசனத்தின் போது மேயர் பிரியா ராஜன் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
நயன் ப்ரியாவுடன் சிறிது நேரம் உரையாடியதாகவும், வாழ்த்து தெரிவித்ததாகவும், அவருடன் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஜோடியின் அடுத்த படமான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய் சேத்புதி மற்றும் சமந்தா ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை காளிகாம்பாள் கோயிலில் தரிசனத்துக்கு சென்ற மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், அங்கு இருந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சந்திப்பு.@VigneshShivN #Nayanthara pic.twitter.com/dlch5Gh0EB
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 11, 2022