Home Cinema சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் திரைவிமர்சனம் இதோ

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் திரைவிமர்சனம் இதோ

33

சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது , மேலும் இது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் முதல் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் அதிக ஆர்வத்தோடு கொண்டாடினர் , அனைத்து சென்டர்களிலும் அமோகமாக ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் முன்பதிவைக் காண முடிகிறது.

Et Suriya

சுமார்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது, நடிகருக்கு இது ஒரு சிறந்த ஓபனிங்காக இருக்கும் என நம்பப்படுகிறது . சூர்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமப்புற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் அவர் படத்தில் தைரியமான மற்றும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . வெற்றிகரமான ‘ஜெய் பீம்’ படத்திற்குப் பிறகு, சூர்யா மீண்டும் ஒரு வழக்கறிஞராக வலம் வருகிறார் , இந்த முறை அவரது கதாபாத்திரம் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியது .

Et Ssuriya

தென்னாடு பகுதியில் வக்கீலாக இருக்கும் சூர்யா, தந்தை சத்யராஜ், தாய் சரண்யாவுடன் வாழ்ந்து வருகிறார். வடநாடு பகுதியில் இருக்கும் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் வினய். தென்னாடு, வடநாடு ஊருகளுக்கு இடையே சில ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது.

இந்நிலையில் ஊரில் சில பெண்கள் கொலை மற்றும் தற்கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க சூர்யா தீவிரம் காட்டுகிறார். இதன் பின்னணியில் வினய் இருப்பது சூர்யாவிற்கு தெரிய வருகிறது.

இறுதியில் பெண்களை வினய் கொலை செய்ய காரணம் என்ன? வினய்க்கு சூர்யா தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Et Suriya

படத்தின் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, காமெடி, நடனம், ரொமான்ஸ், சென்டிமென்ட், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக வரும் பிரியங்கா மோகன் வெகுளித்தனமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார் வினய். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

பாசமான தாய், தந்தையாக சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷனி, சூரி, புகழ் ஆகியோர் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

Sivakumar Family
பெண்களுக்கு நடக்கும் பாலியல் மிரட்டல்களை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.

Et Suriya

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. ரத்தினவேலு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

Et Suriya

மொத்தத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ துணிச்சலான வெற்றி.’கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ போன்ற வெற்றிகரமான கிராமிய நாடகங்களை வழங்கிய பாண்டிராஜ், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெற்றிகரமான ஃபார்முலா மூலம் மீண்டும் ஒர்க் அவுட் ஆயிரக்கா என்பதையும் பார்க்கலாம் .

Et Suriya
வில்லனாக வரும் நடிகர் வினய், சூர்யாவிற்கு நிகரான நடிப்பை காட்டியுள்ளார். இயக்குனர் பாண்டிராஜின் மண்மணம் மாரா கதைக்களம் சூப்பர். முதல் பாதி திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஆனால், ‘உள்ளம் உருகுதையா’ பாடலை தவிர்த்து இருக்கலாம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறத்தலை சரியாக எடுத்துக்காட்டியுள்ளார். பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை என்றும் ஆணித்தனமாக காட்டியுள்ளார். அதற்காக தனி சல்யூட்.

ராம், லக்ஷம் ஸ்டண்ட் மாஸ்டர்களின் சண்டை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளது. டி. இமானின் பின்னணி இசை, பாடல்கள் ஓகே. ஆர். ரத்னவேலுவின் ஒளிப்பதிவு சூப்பர். ரூபனின் எடிட்டிங் படத்திற்கு பலம்.

படத்தில் சில உண்மை சம்பவங்களை இயக்குனர் இன்ஸ்பிரேஷன் எடுத்திருப்பது போல் தெரிகிறது, மேலும் படம் சர்ச்சையை கிளப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.