Home Local news சுவர் இடிந்து வீழ்ந்ததில் சுவருக்கு அடியில் சிக்கி ஒரு குழந்தை பலி!! மேலும் ஒரு குழந்தை...

சுவர் இடிந்து வீழ்ந்ததில் சுவருக்கு அடியில் சிக்கி ஒரு குழந்தை பலி!! மேலும் ஒரு குழந்தை படுகாயம்

19
அக்குரஸ்ஸ, நில் மெனிக்கம பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த போது பழைய வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு குழந்தை படுகாயமடைந்துள்ளது.

சுவர் இடிந்து வீழ்ந்ததில்

சுவருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த 8 வயதுடைய டி. எஸ்.தரிந்து டில்ஷானின் சடலம் தற்போது மேலதிக பரிசோதனைகளுக்காக அக்குரஸ்ஸ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

04 வயதுடைய மற்றைய குழந்தை பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றது.

சுவர் இடிந்து வீழ்ந்ததில் சுவருக்கு அடியில் சிக்கி ஒரு குழந்தை பலி!! மேலும் ஒரு குழந்தை படுகாயம்

ஆறு பிள்ளைகளைக் கொண்ட இந்தக் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றை கட்டுவதற்கு வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.