Home today Astrology சிம்மம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

சிம்மம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

26
சிம்மம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருஷத்தில் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் தீரும் . எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மேலும் எவருக்கும் முடியாத விஷயங்களுக்கு வாக்கு கொடுக்கவேண்டாம்.

சிம்மம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

மற்றபடி குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து கெளரவம் உயரும். உங்கள் தன்னம்பிக்கையும், தனித்தன்மையும் அதிகரிக்கும். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். பழைய கடன்களையும் வசூலிப்பீர்கள்.

விலகி இருந்த உறவினர்களும் நண்பர்களும் தேடி வருவார்கள். மனதிலும் நேர்மறை சிந்தனைகள் உண்டாகி தெளிவுடன் செயல்படுவீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த காலதாமதங்கள் நீங்கும் காலகட்டமிது.

ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகன்று சுமுகம் ஏற்படும். அந்தச் சொத்துக்களிலிருந்து வருமானமும் வரத் தொடங்கும். உடல்நலமும் மனவளமும் நன்றாக இருக்கும்.

எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தருவதோ அல்லது முன்ஜாமீன் போடுவதோ கூடாது. செய்தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும், வழிமுறைகளையும் கொடுக்கும்.

மேலும் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவியால் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள்.

பயணங்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால், உங்கள் கைப் பொருள்களை கவனத்துடன் திருட்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தெய்வ வழிபாட்டிலும் ஆன்மிகத்திலும் மனம் ஒருமித்து ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும் காலகட்டமிது.

உத்யோகஸ்தர்களுக்கு பொருளாதாரம் ஏற்றம், இறக்கமாகக் காணப்படும். திருமணம் சற்று தள்ளிப்போனாலும் விரைவில் கைகூடும். வீண் செலவுகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளினால் சற்று மனம் சோர்ந்தாலும் உடன் பணிபுரியும் ஊழியர்களால் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

வியாபாரிகள் கூட்டுத் தொழிலைத் தவிர்த்திடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று கவனம் தேவை.

விவசாயிகளுக்கு விளைபொருள்களை விற்பதில் சற்று நஷ்டம் உண்டாகலாம். எனினும் கடன் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது பதியும். புதுப்புது முயற்சிகளினால் பெருமை சேரும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் கிடைத்தாலும் கையொப்பமிட சற்று காலம் தள்ளிப்போகும். இருப்பினும் பழைய பாக்கிகள் கைக்கு வரும்.

பெண்மணிகள் உடன் பிறந்தவர்களுடன் இணக்கமாக இருங்கள். பெற்றோர் வழியில் பெருமைகளும், பிள்ளைகளினால் சந்தோஷமும் நிலைத்திடும். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். தெய்வீகத்தில் சற்று நாட்டம் கூடும்.

மாணவமணிகள் பெற்றோரின் கோரிக்கைகளை மதித்து நிறைவேற்றுங்கள். மதிப்பெண்கள் எதிர்பார்த்தபடி வரும். மேற்படிப்புக்கான முயற்சியில் தீவிர அக்கறை காட்டுவீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

சிம்மம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், சிம்மம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், சிம்மம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்,சிம்மம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்