Home Cinema சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் First சிங்கிள் அப்டேட் இதோ...

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் First சிங்கிள் அப்டேட் இதோ !!

9

எஸ்.டி.ஆர், கவுதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தங்களது வரவிருக்கும் திரைப்படம் – வெந்து தனித்து காடு.

ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, கௌதம் மேனன் மூவரும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டனர். இப்படத்திற்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் அதற்கு “வெந்து தனிந்து காடு” என மறுபெயரிட்டனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

வழக்கமாக கௌதம் மேனன் படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் தாமரை இப்படத்திற்கு பாடலாசிரியராக தொடர்பு கொண்டுள்ளார். ராஜீவ் நாயர் கலை இயக்குனராகவும், கெளதம் மேனனின் சகோதரி உத்தாரா மேனன் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் தொடங்கியது. பின்னர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதையடுத்து படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Str

சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தை சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் அம்மாவாக நடிகை ராதிகா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் தமிழில் அறிமுகமாகிறார்.

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள திங்க் மியூசிக் நிறுவனம், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட VTK படத்தின் முதல் சிங்கிள் மே 6-ஆம் தேதி வெளியாகும்” என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்போடு சிம்பு, சித்தி இத்னானி ஜோடியாக நடிக்கும் லவ்வி டவி போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.