Home Finance சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு ! பெற்றோல் 338 ஆக அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு ! பெற்றோல் 338 ஆக அதிகரிப்பு

21

பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை அதிகரித்துள்ளது

நேற்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி,

92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 373 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 329 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்