Home Local news சனி 2 மணி நேரமும், ஞாயிறு 1 மணி நேரம் மட்டுமே மின் வெட்டுக்கு...

சனி 2 மணி நேரமும், ஞாயிறு 1 மணி நேரம் மட்டுமே மின் வெட்டுக்கு அனுமதி.

12

வார இறுதி நாட்களில் சனிக்கிழமை (09) 2 மணி நேரமும், ஞாயிற்றுக்கிழமை ஒரு மணிநேரமும் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சனிக்கிழமை (09) மின்வெட்டு

ABCDEFGHIJK மற்றும் L ஆகிய வலயங்களில் மாலை 06.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே PQRSTUVW ஆகிய வலயங்களில் பிற்பகல் 3.00 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, CC1 வலயத்தில் காலை 6.00 மணி தொடக்கம் முற்பகல் 09.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (10) மின்வெட்டு

ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் மாலை 06.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, CC1 வலயத்தில் காலை 6.00 மணி தொடக்கம் முற்பகல் 09.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.