Home Local news சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில்!! நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்!

சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில்!! நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்!

13

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்நிலையிஒல் போராட்டத்திற்கு வந்த ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடந்த்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் , ஜனாதிபதி கோட்டாபய தப்பியோடியதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க இருந்தனர்.

இந்நிலையில், சஜித் தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறிருக்க, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.