Home Accident News கோர விபத்தில் சமுர்த்தி வங்கி ஊழியர் பரிதாப மரணம்

கோர விபத்தில் சமுர்த்தி வங்கி ஊழியர் பரிதாப மரணம்

24

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு–கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இன்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழதுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எருவில் சமுர்த்தி வங்கியின் காசாளராக கடமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் ( 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை பக்கம் நோக்கி பணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பின்னால் சென்ற சொகுசு ரக ஜீப் வண்டி ஒன்று மோதியதில் குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளார்,

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்