Home Local news கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வந்த குழுவினர் விரட்டியடிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வந்த குழுவினர் விரட்டியடிப்பு

12

சிலாபம் – அலாவத்த பகுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மக்கள் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தலைமையிலான ஆர்ப்பாட்ட குழுவே இவ்வாறு பொது மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் சிலாபம் நகரில் பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

இந்த நிலையில் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் மழை, வெயில் பாராது மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

277587731 516951730099606 8157335018576946207 N 277587759 516951523432960 910744087695922139 N 277737082 516951470099632 4604981438651244251 N 1