நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலுமுள்ள சுகாதாரத்துறை சார் ஊழியர்கள் இணைந்து கொழும்பு சுகாதார அமைச்சு முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு சுகாதார அமைச்சின் முன்றலில் இன்று காலை முதல் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கையில்,
எமது சேவையின் அடிப்படையில் தான் எமக்கான பதவி உயர்வு தரப்பட்டது. முருத்தெட்டுவே தேரர் தான் எமது பதவி உயர்வை நிறுத்தியுள்ளார். நாங்கள் அவர்களின் பதவியில் இத்தனையும் கேட்கவில்லை.
சேவை அடிப்படையிலான பதவி உயர்வைக் கோரியே நாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எமது பதவி உயர்வைப் பெற்றுத் தரும் வரை இந்த போராட்டம் தொடரும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பல இடங்களிலிருந்தும் வருகை தந்த சுகாதார ஊழியர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.