Home Local news கனடாவைச் சேர்ந்த பெண் யாழில் கொரோனாவால் உயிரிழப்பு

கனடாவைச் சேர்ந்த பெண் யாழில் கொரோனாவால் உயிரிழப்பு

19

யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த 65 வயதுப் பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த இவர் குப்பிளானில் தங்கியிருந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இவர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்ததை அடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆயினும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்தார்.

அவரது உடலில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்குக் கொரோனாத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.