Home Local news கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை – தொடரும் போராட்டம்

கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை – தொடரும் போராட்டம்

10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 2வது நாளாக தொடர்ந்துள்ளது.

கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை - தொடரும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள பலர் அங்கிருந்து வெளியேறாத நிலையில் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக ஜனாதிபதி செயலகம் முற்றுகை - தொடரும் போராட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.