Home gossips யாழில் மூன்று வைத்தியசாலைகள் மாறியும் அடங்காத ஆசை!! இளம் பெண்ணிடம் குறும்பு செய்த வைத்தியரிற்கு பூசை...

யாழில் மூன்று வைத்தியசாலைகள் மாறியும் அடங்காத ஆசை!! இளம் பெண்ணிடம் குறும்பு செய்த வைத்தியரிற்கு பூசை வைத்த 8 பேர் கைது!

21
யாழ்.கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்த முயன்ற குற்றச்சாட்டில் 8 இளைஞர்களை கொடிகாமம் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

23 வயதான யுவதி ஒருவர் தனது தாத்தாவினை அழைத்துக் கொண்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் வயோதிபரை பரிசோதித்த வைத்தியர் அவரை சிகிச்சைக்காக அனுப்பிவைத்த பின்னர் யுவதியின் தொலைபேசி இலக்கத்தை கேட்டதாகவும், யுவதி தொலைபேசி இல்லை எனக் கூறிய நிலையில் தனது தொலைபேசி இலக்கத்தை எழுதி யுவதியிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை

இந்நிலையில் மனவருத்தத்துடன் வீடு திரும்பிய யுவதி சம்பவத்தை தனது உறவுகளுக்கு தெரிவித்த நிலையில் சிறிது நேரம் கழிந்து, மிருசுவில் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்களான இளைஞர் குழுவொன்று அதிரடியாக வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியரை தாக்கியது.

வைத்தியரின் அறைக்குள் வைத்தும், பின்னர் அவரை வெளியில் இழுத்து வந்தும் தாக்கியதுடன் அவரை பொலிஸ் நிலையம் இழுத்துச் செல்லவும் முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வைத்தியர் பொலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 8 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, 23 வயதான குறித்த யுவதியும் 38 வயதான வைத்தியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, குறித்த வைத்தியர் ஆரம்பத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியதாகவும் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றியதாகவும், பின்னர் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது

மேற்படி வைத்தியர் முன்னர் பணியாற்றிய வைத்திய சாலைகளிலும் இதுபோல பல குறும்பு சேட்டைகள் செய்து விசாரணை வலயத்திற்குள் சிக்கியவர் எனவும் தெரியவருகின்றது.

நேற்று இடம்பெற்ற சம்பவத்தினை தொடர்ந்து குறித்த வைத்தியர் உடனடியாக கோப்பாயில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.