அஜீத் குமாரின் வலிமை திரைப்படம் மூன்றாவது வாரத்தில் திரையிடப்பட்டு, தமிழகம் மற்றும் சர்வதேச நாடுகளில் அணைத்து திரையரங்குகளில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
எதற்கும் துணிந்தவர் படம் வந்தபோதிலும் , வலிமை தமிழ்நாட்டில் பல திரைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் மூன்றாவது வாரத்தை நேர்மறையான குறிப்பில் தொடங்கியதாகத் தெரிகிறது.
சூர்யாவின் எதிர்க்கும் துணிந்தவன் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் ஆகிய புதிய வெளியீடுகள் இருந்தபோதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமையை திரையிட விரும்புகிறார்கள்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற இயக்குனர் சங்க கூட்டத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பட்டது. ப்ளூ சட்டை மாறன் இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், படங்கள் குறித்து தவறான விமர்சனம் செய்தால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பின்பும் தொடர்ந்து திரைப்படங்களை தவறாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான அஜித் நடித்த வலிமை படம் குறித்து விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன், திரைப்படம் குறித்து விமர்சனம் செய்வதை தவிர்த்து, நடிகர் அஜித்குமாரை தனிப்பட்ட முறையில் மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மத்தியிலும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இனி தமிழ் சினிமாவில் தலை காட்ட முடியாதபடி ஒரு சம்பவம் அரங்கேற உள்ளது, தமிழ் திரைப்பட வினியக்கஸ்தர் மற்றும் நடிகருமான ஜெயம் SK கோபி இது குறித்து தெரிவித்ததாவது, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ப்ளு சட்டை மாறன் குறித்து இந்ந தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது பிப்ரவரி 2022 வரை ப்ளு சட்டை மாறன் தனது தான்தோனிதனத்தனமான அவதுறான சினிமா விமர்சனத்தை நிறுத்திய பாடில்லை.
சமீபத்தில் வெளியான வலிமை படம் குறித்து விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதலை அவர் செய்துள்ளார். இந்நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை 04.3.2022) காலை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அனைவரிடத்திலும் ஆதரவு பெற்று.
அவர்களிடம் ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையெழுத்து பெற்று ப்ளு சட்டை மாறனை இயக்குநர் சங்கத்தில் இருந்து நீக்க புதிய தலைவர் திரு.RK.செல்வமணி அவர்களிடம் மனு ஒன்றை கொடுக்கவுள்ளேன். தமிழ் சினிமாவை தன் உயிரென நேசிக்கும் தலைவர் திரு.RK செல்வமணி அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என நடிகர்,திரைப்பட விநியோகஸ்தர் ஜெயம்SKகோபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இம்முறை தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்களிடம் இருந்து புளு சட்டை மாறனுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்துக்கு இயக்குனர் சங்க தலைவர் RK செல்வமணி தள்ளப்பட்டுள்ளதால், இம்முறை புளு சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இனி அவருக்கும் தமிழ் சினிமாவுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் ஆர் கே சுரேஷ் அவர்கள் அஜித்தை பற்றி பேச நீ யாருடா என்று ப்ளூ சட்டை மாறனை ஒருமையில் திட்டிய வீடியோ வைரலாகிவருகிறது