Home Health and Fitness கெட்ட கொழுப்புக்கு குட் பை சொல்ல வைக்கும் வெங்காயம்

கெட்ட கொழுப்புக்கு குட் பை சொல்ல வைக்கும் வெங்காயம்

9
மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற் கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்பழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என்கின்றன ஆய்வுகள்.

உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம்.

‘ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா’ என்கிற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் அதிகப்படி கொலஸ்ட்ரால், ரத்தக்குழாய்களில் எக்கச்சக்கமாக கொழுப்பு மற்றும் எடைகூட்டும் பொருட்கள் சேர்வதால் ஏற்படுகிறது.

இதனால் உடல் ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய் போன்றவற்றிற்கான ரிஸ்கை அதிகமாக்குகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உடலில் சேரும் இந்த கொலஸ்ட்ரால் அளவினை ரத்த மாதிரி ஆய்வின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

கெட்ட கொழுப்புக்கு குட் பை சொல்ல வைக்கும்  வெங்காயம்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளை சரியான முறையில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை கெட்ட கொலஸ்ட்ராலிடம் இருந்து காப்பாற்ற முடியும்.

நாம் அன்றாட உணவில் சேர்க்கும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

சின்ன வெங்காயத்தில் கால்சியம் , மினரல் ,வைட்டமின் ,ஐயன் ,பொட்டாசியம் ,பாஸ்போரோஸ் இது போன்ற சத்துகள் உள்ளது .

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் அதிக சத்து உள்ளது .

இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் தென்படும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம்! வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்க இந்த நன்மைகள் தேடி வருமாம்

எப்படி எடுத்து கொள்வது?

ஒரு சுத்தமாக பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய (அப்போதுதான் தேனுடன் ஊறும்) சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும்.

இரண்டு நாட்கள் அப்படியே ஓரமாக, கைபடாமல் எடுத்து வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும்.

கெட்ட கொழுப்புக்கு குட் பை சொல்ல வைக்கும் வெங்காயம்

நீங்கள் வைத்ததை விட சற்று நீர்த்துப் போயிருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறியிருக்கும். இதை தினமும் காலையில் வெறும் சாப்பிட்டு வர நிறைய பலன்கள் கிடைக்கும்.

நன்மைகள்

தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

நம்முடைய உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும்.

தேனில்ஊற வைத்த சின்ன வெங்காயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமுமு் இரண்டு வீதம் சாப்பிடும் போது, அது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ரத்தத்தில் உ்ளள பிற கழிவுகளை வௌியேற்றுவதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது.

இவை இன்சோம்னியா பிரச்சினையை சின்ன வெங்காயம் தீர்க்கும் தன்மை கொண்டது.

கெட்ட கொழுப்புக்கு குட் பை சொல்ல வைக்கும்  வெங்காயம்

தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.

நெஞ்சு சளியால் அவதிப்படுகிறவர்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பாக தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால், ஓரிரு நாட்களில் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி வாய் அல்லது மலத்தின் வழியே வெளியேறிவிடும்.

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச்சதையைக் குறைக்கும்.