Home Local news குள்ள நரியின் தந்திரம் அம்பலம்!!

குள்ள நரியின் தந்திரம் அம்பலம்!!

17

1. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைக்கப்படுதல்

2. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 13 ஆம் திகதி பதவி விலகக் காத்திருத்தல்.

இவை இரண்டுமே ஒன்று திரண்டுள்ள மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவும், மக்களினதும், சர்வதேச ஊடகங்களினதும் கவனத்தைத் திசை திருப்பவும் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கமே மேற்கொள்ளும் முயற்சிகள் என்பது புத்தியுள்ள எவருக்குமே தெளிவாகும்.

அரசாங்கமானது, மக்களை இந்தப் போராட்டத்தில் வெல்ல ஒருபோதும் அனுமதிக்காது. இலங்கை வரலாற்றில் ஒரு தோல்விற்ற அரசாங்கமாக தான் குறிப்பிடப்படுவதை அது விரும்பாது.

இப்போதே, மக்கள் போராட்டத்தின் வெற்றியை மறந்து, அனைவரும் ரணிலின் வீடு தீயில் எரிந்தது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இல்லையா? ராஜபக்ஷேக்களினதும், ரணிலினதும் தற்போதைய தேவையே அதுதான்.

எனவே, தயவுசெய்து ரணில் + ராஜபக்ஷேக்களின் கூட்டு சதிகளைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

(புகைப்படங்கள் – ரணிலின் வீட்டுக்குள்ளிருந்த புத்தகங்களும், பெறுமதியான பொருட்களும் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்ட பின்பே வீடு எரியூட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள். எனவே, தீ வைத்தலை யார் செய்திருப்பார்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.)

இதேவேளை, நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவருள் ஒருவர் 19 வயதான கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் ஏனையவர்கள் கடவத்த மற்றும் காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல் 6 மணிக்குப் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. ஆனால் இந்தச் சம்பவத்தின் போது குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

– எம். ரிஷான் ஷெரீப்

குள்ள நரியின் தந்திரம் அம்பலம்!! குள்ள நரியின் தந்திரம் அம்பலம்!! குள்ள நரியின் தந்திரம் அம்பலம்!!