கும்பம் -தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
(அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்)
எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
13/4/2022 வரை எதிலும் பொறுமை தேவை. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கோபம், டென்ஷன் தவிர்க்கவும். கடந்த கால பிரச்னைகள் மற்றும் இழப்புகளில் இருந்து படிப்பினை பெறும் காலம். உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும்.
யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். பணம் கொடுக்கல்-வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மனக்கவலை, டென்ஷனை தவிர்க்க யோகா தியானம் பயில்வது நல்லது.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்து செல்வது நல்லது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தாமதமாகலாம். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. 13/4/2022 க்கு பிறகு வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் தற்போது கை வந்து சேரும்.
விலகிச்சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். புதிய நண்பர்களால் நன்மை உண்டு. உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். இனிய பேச்சால் மற்றவர்களை கவருவீர்கள்.
இதுவரை இருந்த கஷ்டங்கள் தடைகள் பிரச்சினைகள் நீங்கி மனதிற்கு இதமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடும். மனோபலம் அதிகரிக்கும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இருப்பினும் தந்தை உடல்நலனில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகள் சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். பதவி உயர்வு ஊதிய, உயர்வு தேடிவரும். வியாபாரிகளுக்கு புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளால் புகழ் பெருகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பரிகாரம்: மதுரை மீனாட்சியை செவ்வாய்க்கிழமையில் வழிபட்டு வர பொருளாதார நிலை உயரும்.
கும்பம் -தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கும்பம் -தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கும்பம் -தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கும்பம் -தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கும்பம் -தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்