Home CRIME NEWS கல்வியங்காட்டில் பட்டப்பகலில் வாள்வெட்டு!! – 28 வயது நபர் படுகாயம்

கல்வியங்காட்டில் பட்டப்பகலில் வாள்வெட்டு!! – 28 வயது நபர் படுகாயம்

19

கல்வியங்காட்டில் புடைவை வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர் மீது இன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த 28 வயதுடைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முரண்பாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.