கமலிடம் டோஸ் வாங்கிய சிவகார்த்திகேயன் !! சிவகார்த்திகேயனை கதறவிட்ட ஆண்டவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகர்கள் பட்டியில் சேர்ந்துவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது திரைப்படங்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். அவர் நடிப்பில் அடுத்ததாக டான் திரைப்படம் வரும் மே மாதம் திரைக்கு வர உள்ளது.
சிவகார்த்திகேயன் மற்ற கம்பெனி படங்களில் நடிப்பதை காட்டிலும் தனது சொந்த நிறுவனமான SK புரோடக்சன் நிறுவனத்தில் நடிப்பதற்கே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தன்னிடம் வந்து கால்சீட் கேட்கும் பட நிறுவனங்களிடம் நானே படத்தை தயாரித்து உங்களுக்கு கொடுத்து விடுகிறேன், என்று, ஃபர்ஸ்ட் காப்பி எனும் அடிப்படையில் ஒப்பந்தம் பேசுகிறாராம். இதன் மூலம் கணிசமான லாபம் அந்த பட நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துவிடும். அதுபோக சம்பளம் தனியாக கிடைத்துவிடும் ஆதலால் இதனை செயல்படுத்த முடிவு செய்துள்ளாராம்.
இதே யுக்தியை டான் திரைப்படத்தில் பயன்படுத்தி லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் செயல்படுத்தினார். அதேபோல கமல்ஹாசன் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படம் தயாரிக்க உள்ளார். அதற்கும் அவ்வாறு தயாரித்து தருவதாக சிவகார்த்திகேயன் கூறவே, கமல் தரப்பு திட்டவட்டமாக மறுத்து விட்டதாம்.
ராஜ் கமல் படம் நிறுவனத்திடமே டெக்னீஷியன்கள் நிறைய பேர் உள்ளனர். ஆதலால், நாங்களே முழு படத்தையும் எடுத்து விடுகிறோம் என்று கூறி சிவகார்த்திகேயனை ஆஃப் செய்து விட்டனராம்.
இதற்கு முக்கிய காரணமே பண ஆசை தான் என்றும் அது கமலிடம் பலிக்குமா என்றும் இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்