Home today Astrology கன்னி – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

கன்னி – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

14
கன்னி – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

இந்த சுபகிருது வருஷம் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி நிறையும்.

மற்றவர்களைச் சரியாக எடைபோட்டு எச்சரிக்கையுடன் பழகுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

கன்னி - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

மழலை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பொறுப்புகளையும் சரியாகக் கையாளுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர் புகழ் உயரும். உயர்ந்தோரின் நட்பால் புதிய கெüரவமான பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

உங்கள் செயல்களைச் சரியாக முடிக்க நண்பர்கள் தேவையான உதவிகளையச் செய்வார்கள். சிலருக்கு பழைய வீட்டை விற்று விட்டு புதிய வீட்டை வாங்கும் யோகம் உண்காக் கூடிய கால கட்டமிது என்றால் மிகையாகாது.

இந்த ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் வீட்டிலும் வெளியிலும் உங்கள் பெயர் புகழ் உயரத் தொடங்கும். சமுதாயத்தில் பிரபலஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.

உங்களின் தன்னம்பிக்கை நாளுக்கு நாள் உயரும். பெற்றோருடன் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குழந்தைகளுக்கும் தக்க ஆலோசனை அறிவுரைகளை வழங்குவீர்கள். ஆன்மிகத்திலும், இறைபணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

புதிய நண்பர்களின் மூலம் செய்தொழிலில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசாங்கத்திலிருந்து சாதகமான செய்திகளும், சலுகைகளும் கிடைக்கும். கடினமாக உழைத்து ஈட்டும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்புகளில் வைப்பீர்கள்.

சிலருக்கு பங்கு வர்த்தகத்தின் மூலமும் லாபம் கிடைக்கும். பூர்விகச் சொத்துகளில் இருந்த மனக்கசப்புகள் அகன்று சுமுகமான பாகப்பிரிவினை ஏற்படும் காலக்கட்டமிது என்றால் மிகையாகாது.

கன்னி - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

உத்யோகஸ்தர்களுக்கு கடினமான உழைப்பு இன்னும் தொடரும். நீண்டகால எண்ணங்கள் ஈடேறும் காலம் இது. உழைப்பை மூலதனமாக்கி முன்னேறுவீர்கள். எதிரிகளின் பலம் அழியும். பயணங்களின்போது பாதுகாப்பு தேவை.

வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் அனுசரணையுடன் நடந்து கொண்டாலும் கடை ஊழியர்களின் உதவி கிட்டாது. சற்று கவனமாக நடந்து கொள்வது உசிதம். லாபம் பெருகினாலும் கடையை தற்போது விரிவுபடுத்தாதீர்கள்.

விவசாயிகளுக்கு குடும்பத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். புதுப்புது உபகரணங்களை வாங்கி நவீன விவசாயம் மேற்கொள்வீர்கள். கால்நடைகளாலும் நல்ல பலனை அனுபவிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் சில பிரச்னைகள் உருவாகும். எனினும் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும், புதிய பதவிகள் வந்தாலும் அது தற்காலிக பதவியாகவே இருக்கும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது ஒப்பந்தங்கள் கைகூடும். பொருளாதார வளர்ச்சி சற்று சுமாராகவே இருக்கும்.

பெண்மணிகள் கணவரிடமும், கணவர் வீட்டாருடனும் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் விளையாட்டுத் துறையில் முத்திரைப் பதிப்பீர்கள். உயர்கல்வி கற்க வெளிநாடு ஆயத்தமாவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

கன்னி – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கன்னி – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கன்னி – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கன்னி – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்