Home today Astrology கடகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

கடகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

12
கடகம் – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த சுபகிருது வருஷம் சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகத் தொடங்கும்.

குடும்பத்தில் தன்னிறைவைக் காண்பீர்கள். உங்கள் நிர்வாகத் திறமை கூடும். அரசியல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல ஆதாயங்களும் அனுகூலங்களும் உண்டாகும். தன் வசமுள்ள விலை உயர்ந்த பொருள்களை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு புதிய அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள்.

கடகம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடன் பிறந்தோருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். கடந்தகாலத்தில் உங்களின் உழைப்புக்கு கிடைக்காத மதிப்பும் மரியாதையும் கிடைக்கத் தொடங்கும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அதனால் பெருமையடைவீர்கள். அனைவரிடமும் முகமலர்ச்சியோடு பேசிப் பழகுவீர்கள். உங்களை குறை கூறி வந்த நண்பர்கள் உங்களின் புகழ்பாடுவார்கள்.

இந்த ஐப்பசி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் துரித முன்னேற்றம் உண்டாகு ம். சுயமதிப்பும், வெளியிடத்து வரவேற்பும் அமோகமாக இருக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத உதவிகளும், பாராட்டும் கிடைக்கும்.

குடும்பத்தாருடன் புனித திருத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தெய்வ வழிபாட்டிலும், ஆன்மிகத்திலும் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் காலடி எடுத்து வைப்பீர்கள்.

பொருளாதாரம் மேன்மையாக அமையும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். உடன்பிறந்தோருக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுபட்டு விடுவீர்கள்.

அதே நேரம் எவருக்கும் அநாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம். உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ அல்லது முன் ஜாமீன் போடுவதோ கூடாது. தாமதமாகி வந்து கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்களும், குழந்தை பிறப்பும் இந்த காலகட்டத்தில் நடந்தேறும்.

உத்யோகஸ்தர்களுக்கு உத்யோக பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைப்பததற்கு வாய்ப்பு வரும். உங்களது திறமைகளை மேலிடம் பாராட்டும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சறுக்கல்கள் இருந்தாலும் உயர்வு காண்பீர்கள். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் காண்பீர்கள். போட்டிகள் குறையும். விவசாயிகள் மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். அனுபவ அறிவினால் விவசாயத்தைப் பெருக்குவீர்கள். சிந்தித்து செயல்படுவது நல்லது.

கடகம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். கட்சி மேலிடத்தி ன் கெடுபிடி அதிகரிக்கும். அந்தஸ்தில் சிறிய குறைபாடுகள் உண்டாகுமானாலும் கவனமாகச் செயல்பட்டு நீக்கிவிடுவீர்கள்.

கலைத்துறையினர் எடுத்த காரியத்தை பின்வாங்காமல் தொடர்ந்து முயற்சித்து வென்று விடுவீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். நல்ல திறமையான கதாபாத்திரங்கள் தேடிவரும். சக கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் உங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளைச் செய்வீர்கள்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுதல்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். புத்தாடை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகச் சுற்றுலா தலங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும்.

மாணவமணிகள் பல திறமையான போட்டகளில் பங்கேற்று வெற்றியும் பெறுவீர்கள். எதிர்பாராத பல உதவிகள் கிட்டும்.

பரிகாரம்:- விநாயகப் பெருமானை வழிபடவும்.

கடகம்  – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கடகம்  – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள், கடகம்  – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்கடகம்  – தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்