Home Local news எரிபொருள் மோசடி: நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 68 பேர் கைது-!

எரிபொருள் மோசடி: நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 68 பேர் கைது-!

13

அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது இலங்கை பொலிஸார் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மொத்தம் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல், 726 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகப்படியான எரிபொருளை கொள்வனவு செய்து வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் பல நபர்கள் சட்டவிரோத வியாபாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கேன்கள் மற்றும் பீப்பாய்களில் அதிகப்படியான எரிபொருளை கொள்முதல் செய்து, பின்னர் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியானது வாகனங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் நிற்கும் பல நபர்களை பாதித்துள்ளது.

எரிபொருளின் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான மின்வெட்டு என்பன தனிநபர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவதற்கு பங்களித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சட்டவிரோத எரிபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வதற்காக நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களை ஏமாற்றும் இவ்வாறான நபர்களை கைது செய்ய நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எரிபொருள் மோசடி: நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 68 பேர் கைது-! எரிபொருள் மோசடி: நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 68 பேர் கைது-!