மாஸ் தமிழ் நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் நேற்று உலகளவில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படம் வெளியானதில் இருந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பையும், மாஸ் கமர்சியல் படமாக இருந்தது என்ற விமர்சனத்தை பெற்று சிலரோ எதிர்மறை விமர்சனம் பெற்றுது
இந்நிலையில் நேற்று வெளிவந்துள்ள இப்படம் குறித்த பாக்ஸ் ஆஃபிஸ் விவரங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி தற்போது ET படத்தின் சென்னை வசூல் விவரம் வெளியாகியுள்ளது, இப்படம் சென்னையில் முதல்நாளில் ரூ.62 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.
சூர்யாவின் திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகியும் சென்னையளவில் 1 கோடியை கூட வசூலில் தாண்டவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருப்பதோடு மட்டும் இல்லாமல் படத்திற்க்கு அதிக புரமோஷன் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறி வருகின்றனர் .
ஒரு சிலரோ சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை காண சூர்யா ரசிகர்களே ஆர்வம் காட்டவில்லை என்றும் படம் பார்த்த மக்களோ ரொம்ப போர் அடிக்கும் கதை மற்றும் வில்லன் கதாபாத்திரம் சரியாக ஒர்க் அவுட் ஆக வில்லை என்றும் கூறிவருகின்றனர்.